search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிந்தாதிரிப்பேட்டை போராட்டம்"

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிரிப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட திட்டமிட்டனர்.

    நேற்று இரவு புதிய கடையை திறப்பதற்கு மதுபானங்கள் வந்து இறங்கியதாக தெரிகிறது. மதுக்கடையினை இன்று திறக்க இருப்பதாக அறிந்த மக்கள் கடையின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்று திரண்டு கடையின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த பாண்டியன், தட்சணா மூர்த்தி, தி.மு.க. பகுதி செயலாளர் மதன் மோகன், வட்ட செயலாளர்கள் பிரபாகரன், மகேஷ், ஜெகதீசன், காங்கிரஸ் சண்முகம், பா.ஜனதா தாமரை கங்காதரன், அரங்கண்ணல் மற்றும் அப்பகுதி பெண்களும் சாலையில் அமர்ந்து கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். காவிநாயகன் தெருவில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இதுகுறித்து தி.மு.க. பகுதி செயலாளர் மதன் மோகன் கூறியதாவது:-

    ‘‘இந்த பகுதியில் மதுக்கடையை திறக்க ஒரு வருடமாக முயற்சி செய்து வருகிறார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இது குடியிருப்பு பகுதி மட்டுமல்ல பல்வேறு தொழில் செய்யக் கூடியவர்களும் வியாபாரம் செய்கின்றன. இங்கு மதுக்கடை திறந்தால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். பெண்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்.

    அதனால் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கட்சிகளை கடந்து பகுதி மக்களாக எதிர்த்து போராடுகிறோம். இங்கு கடை திறக்க மாட்டோம் என்று எழுத்து பூர்வமாக கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றார்.

    மறியலில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மதுக்கடையை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்று கூறினர்.
    ×